துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியார் பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட முடியாது என்று ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர் படத்தை அவர் செருப்பால் அடித்தார். அதுதொடர்பாக செய்தி வெளியிட்ட துக்ளக் இதழுக்கு கருணாநிதி அரசு தடைவிதித்தது’ என்று பேசியிருந்தார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகக் கூறி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அவர் அரசியல் குறித்து பேசும் கருத்துகள் எல்லாம் சர்ச்சையைக் கிளப்பிவருகிறது.
இந்த சூழலில் துக்ளக் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்றார். அத்துடன், பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் செருப்பு மாலை போடப்பட்டது என்றும் அப்போது ரஜினி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட முடியாது - ரஜினி விளக்கம்
இந்நிலையில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பெரியார் பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் இல்லாத விசயத்தை நான் கூறவில்லை, கற்பனையாகவுன் எதையும் கூறவில்லை,மற்றவர்கள் கூறியது பத்திரிகையில் வந்ததையும் தான் நான் கூறியுள்ளேன் என்று ரஜினி தெரிவித்தார்.

No comments:
Post a Comment